இந்தியாவில் இயற்றப்பட்ட முக்கிய சட்ட திருத்தங்கள்
முதல் சட்ட திருத்தம் (1951):
அடிப்படை உரிமைகள் தொடர்பான சில நடைமுறை சிக்கல்களை சரி செய்யும் நோக்கில் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. கல்வி மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு விசேஷ கவனம் தரப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியல் சாசனத்தில் 9வது அட்டவணை இணைக்கப்பட்டது.
மூன்றாவது சட்டத் திருத்தம் (1955, மே):
1956ம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டது. ஆர்டிகல் 369க்கு தொடர்புடையதாக ஆக்குவதற்காக 7 ஆவது அட்டவணையில் பட்டியல் மூன்றில் இடம்பெற்றிருந்த 33வது அம்சத்திற்கு பதிலீடு செய்யப்பட்டது.
5-வது சட்ட திருத்தம் (1955 டிசம்பர்):
மாநிலங்களின் நிலப்பரப்பு, எல்லை ஆகியவற்றைப் பாதிக்கும் சட்டத்தை பாராளுமன்றம் இயற்றுவதற்கு முன் சம்பந்தப்பட்ட மாநில சட்டப்பேரவையில் அது பற்றி விவாதிக்க போதிய காலம் அளிக்கப்பட வகை செய்யப்பட்டுள்ளது.
6-வது சட்ட திருத்தம் (1956 செப்டம்பர்):
மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தின் மீது மைய அரசு வரி விதிக்க வகை செய்யப்பட்டது.
7-வது சட்டத் திருத்தம் (1956, அக்டோபர்):
மொழி வாரியான மாநில வகைப்பா ட்டுக்கு அங்கீகாரம் அளித்தது. முதல் மற்றும் நான்காவது அட்டவணையை மாற்றியமைத்தது.
8-வது சட்டத் திருத்தம் (1960):
அட்டவணை சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை 1960-ல் இருந்து 1970 வரை நீடித்தது.
9-வது சட்ட திருத்தம் (1960 டிசம்பர்):
1958 செப்டம்பர் மாதம் இந்திய பாகிஸ்தான் உடன்படிக்கையின்படி சில பிராந்தியங்களை பாகிஸ்தானுக்கு அளிப்பதை அனுமதிக்கும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
10-வது சட்டத்திருத்தம் (1961 ஆகஸ்ட்):
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி பிரதேசங்களை இந்திய கூட்டாட்சி யுடன் இணைத்தது.
11-ஆவது சட்டத்திருத்தம் (1961 டிசம்பர்):
துணை குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கும் உரிமை பாராளுமன்றத்தின் இரு சபை உறுப்பினர்கள் ஆகிய தேர்தல் குழுவிற்கு வழங்கப்பட்டது.
12-வது சட்டத்திருத்தம் (1962 மார்ச்):
கோவா, டையூ, டாமன் பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது
13-வது சட்டத் திருத்தம் (1962 டிசம்பர்):
நாகலாந்து இந்தியாவின் 16-வது மாநிலமாக உருவாக்க பல வகை செய்தது:
14-வது சட்ட திருத்தம் (1962 டிசம்பர்):
யூனியன் பிரதேசங்களுக்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்கள் இருக்க வகை செய்யப்பட்டது.
15-வது சட்டத்திருத்தம் (1963 அக்டோபர்):
உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 உயர்த்தியது.
16-வது சட்ட திருத்தம் (1963 அக்டோபர்):
பொது நன்மைக்காக அடிப்படை உரிமைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பார்லிமென்ட் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டை மதிப்பதாக உறுதிமொழி எடுக்க வகை செய்யப்பட்டது.
17-வது சட்ட திருத்தம் (1964 ஜூன்):
தனியார்சொத்துக்களை அரசு எடுக்கும் போது அப்போதைய சந்தை நிலவரப்படி இழப்பீடு அளிக்க வேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
18-வது சட்டத் திருத்தம் (1966):
பஞ்சாபை, பஞ்சாப் மற்றும் ஹரியானா என்று பிரிக்கப்பட்டது. சண்டிகர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.
21-வது சட்டத்திருத்தம் (1967):
பதினைந்தாவது பிராந்திய மொழியாக எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி இணைத்துக் கொள்ளப்பட்டது.
22-வது சட்டத் திருத்தம் (1969):
அசாம் அக்குள் மேகாலயாவை துணை மாநிலமாக உருவாக்கியது.
23-வது சட்ட திருத்தம் (1969):
பட்டியல் சாதியினர் பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
26-வது சட்ட திருத்தம் (1971):
முன்னாள் சமஸ்தானத்து ஆட்சியாளர்களின் பட்டங்கள் மற்றும் விசேஷ சலுகைகளை ரத்து செய்தது. இந்த சட்டத்தின் மூலம் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது.
27-வது சட்ட திருத்தம் (1971):
மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்ட வழி செய்தது.
31-வது சட்ட திருத்தம் (1973):
மக்களவையின் பலத்தை 525 இல் இருந்து 545 ஆக உயர்த்தியது மாநில பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 500 இலிருந்து 525 ஆக உயர்த்தப்பட்டது.
36-வது சட்ட திருத்தம் (1975):
சிக்கிம் இந்தியாவுடன் இணைந்து இந்திய மாநிலமாக ஆக்கியது.
38-வது சட்டத் திருத்தம் (1975):
ஜனாதிபதியால் அவசர நிலை பிரகடனப்படுத்த முடியும். ஜனாதிபதி, கவர்னர் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத் தலைமை ஆகியோரின் உத்தரவுகளே இறுதியானது. இவற்றை நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது.
39-வது சட்டத்திருத்தம் (1975):
பிரதமர்,சபாநாயகர் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவர் மற்றும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவற்றை எந்த நீதிமன்றமும் கேள்விக்குட்படுத்த முடியாது என்று வரையறுக்கப்பட்டது.
40-வது சட்டத்திருத்தம் (1976 மே):
ஒன்பதாவது அட்டவணையில் மேலும் சில சட்டங்கள் சொத்து உச்சவரம்பு, கடத்தல்காரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தல், தவறான விஷயங்கள் வெளியிடுவதை தடுத்தல், கடல் பரப்பின் எல்லைகள், ஆழ்கடலில் கனிம வளங்கள் பற்றிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
41-வது சட்ட திருத்தம் (1976 செப்டம்பர்):
பொதுப் பணித் தேர்வு ஆணையர் குழு உறுப்பினர்களின் ஓய்வு வயது 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது.
42-வது சட்டத்திருத்தம் (1976 டிசம்பர்):
- இந்த சட்டத்திருத்தம் ஆனது இந்திய அரசியலமைப்பில் பல திருத்தங்களை முன்னெடுத்தது. அவற்றைப் பின்வருமாறு ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்,
- மதச்சார்பற்ற, சமத்துவ மற்றும் ஒருங்கிணைந்த ஆகிய வார்த்தைகள் முகப்புரையில் ஏற்றப்பட்டது.
- அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில் செல்லத்தக்க தந்தையின் மீது எந்த நீதிமன்றத்திலும் கேள்வி எழுப்ப முடியாது.
- அரசு கொள்கையின் வழிகாட்டி நெறிகளின் விரிவாக்கம்.
- அடிப்படை உரிமைகளை விட அரசு கொள்கையின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டது. அடிப்படை உரிமைகளின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
- மக்களவை மற்றும் மாநிலங்களவை சட்டசபையின் பதவி காலம் தேசிய நெருக்கடி நிலையின்போது ஆறு வருடங்களாக அதிகரிக்கப்பட்டது.
- தொழிற்சாலைகளில் நிர்வாகத்தில் தொழிலாளர்களும் பங்கேற்க செய்வதற்கான விதிகள் வரையறுக்கப்பட்டது.
- நீதிமன்றங்களில் நீதிப்புணராய்வு அதிகாரம் வரவேற்கப்பட்டது.
- சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்கான விதிகள் சேர்க்கப்பட்டன.
- குழந்தைகள் மற்றும் இளைஞர்களை சுரண்டலில் இருந்து காக்கும் விதிகள் இணைக்கப்பட்டன.
- மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் தொகுதிகளை மறுசீரமைப்பது.2001 ஆம் ஆண்டு வரை 1971ம் ஆண்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
- மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் கூட்டங்களை நடத்த குறைந்தபட்ச உறுப்பினர்களின் வருகை அவசியமில்லை.
- விதி 32 டன் கீழ் மாநில அரசுகள் உடைய சட்டங்களின் செல்லத்தக்க தன்மையை ஆராயும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் நீக்கப்பட்டது.
- நீதிமன்றங்களில் செயல்பாட்டில் ஜூரி முறைக்கு முக்கியத்துவம்.
- அமைச்சரவையின் அறிவுரையின்படி குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்.
- பொது ஊழியர்களுக்கான நிர்வாக தீர்ப்பாயங்கள் அமைப்பது தொடர்பான விதிகள் வகுக்கப்பட்டது.
- நெருக்கடி நிலை விதிகள் அல்லது நெருக்கடி நிலையை இந்திய பிராந்தியத்தின் ஒரு பகுதியில் பிரகடனம் செய்யலாம். குடியரசுத் தலைவரின் ஆட்சி ஒரு தடவை நீடிக்கும் காலம் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடமாக உயர்த்தப்பட்டது.
44-வது சட்டத்திருத்தம் (1978):
- சொத்தின் மீதான அடிப்படை உரிமைகள் நீக்கப்பட்டன.
- மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
- பாராளுமன்ற மற்றும் மாநில சட்டசபைகளில் உறுப்பினர்களுடைய தொகுதிகளின் மீதான பிரச்சனைகள் முறையே குடியரசு தலைவர் மற்றும் ஆளுநரால் முடிவு செய்யப்படும்.
- சட்டசபைகளில் கூட்டங்களை நடத்தத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விதிகள் 42வது சட்ட திருத்தத்திற்கு முன்பு இருந்தவாரே மாற்றப்பட்டன.
- குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரின் தேர்தல் பற்றிய சர்ச்சைகளின் மீது உச்சநீதிமன்றமும், பாராளுமன்ற மற்றும் மாநில சட்டசபைகளின் உறுப்பினர்களுடைய தேர்தலில் ஏற்படும் சர்ச்சைகளின் மீது உயர் நீதிமன்றங்களும் முடிவெடுக்கும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது.
- கேபினட்டில் எழுத்துப்பூர்வமான பரிந்துரையை பெற்றால் அன்றி தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடியாது.
45-வது சட்ட திருத்தம் (1980):
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதற்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்து வருடங்களுக்கு நீட்டித்தது.
52-வது சட்டத் திருத்தம்(1985):
முறைகேடு காரணமாக பதவி நீக்கம் தொடர்பான விதிமுறைகளை 10 ஆவது அட்டவணையில் இணைத்தது.
54-வது சட்டத்திருத்தம் (1986):
உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்தியது.
55-வது சட்ட திருத்தம் (1986):
அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கியது.
56-ஆவது சட்ட திருத்தம் (1987):
அரசியலமைப்பு சட்டத்தின் ஹிந்தி வடிவம், எல்லா பயன்பாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூனியன் பிரதேசமான கோவாவுக்கு மாநில அந்தஸ்து தரப்பட்டது.
58-வது சட்டத்திருத்தம் (1987):
அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
61-வது சட்ட திருத்தம் (1989):
வாக்களிக்கும் வயது 21 லிருந்து 18 ஆக குறைத்தது.
62-வது சட்ட திருத்தம் (1989):
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்து வருடங்களுக்கு நீடித்தது
63-வது சட்ட திருத்தம் (1990):
பஞ்சாபில் அவசரநிலையை அறிவிக்க அதிகாரமளித்தல் 59 ஆவது சட்ட திருத்தத்தை ரத்து செய்தது.
69-வது சட்ட திருத்தம்:
1991 இல் டெல்லி தேசிய தலைநகர் என்று மாற்றப்பட்டது.
73-வது சட்டத் திருத்தம்:
கிராமங்களில் கிராம சபை, கிராமங்களில் பஞ்சாயத்து, பஞ்சாயத்தில் அனைத்து பதவிகளும் நேரடித் தேர்தல் மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் இட ஒதுக்கீடு மற்றும் பஞ்சாயத்து அமைப்பின் பதவிக்காலத்தை 5 நிர்ணயித்தல் போன்ற சட்டங்களுக்கு வழி செய்தது.
74-வது சட்ட திருத்தம் (1992):
நகராட்சிகளுக்கு சாசன அங்கீகாரம் மற்றும் நகராட்சிகளில் பட்டியல் சாதியினர் பழங்குடியினர், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்தது.
78-வது சட்ட திருத்தம் (1995):
ஒன்பதாவது அட்டவணையில் நில சீர்திருத்தம் தொடர்பான திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.
79-வது சட்டத்திருத்தம் (1999):
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடித்தது.
80-வது சட்டத் திருத்தம் (2000):
ஆர்டிகள் 269, 270 மற்றும் 272 இடம் பெற்றிருந்த வரி விதிப்பு தொடர்பாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
81-வது சட்ட திருத்தம் (2000):
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில் அதை வரும் வருடங்களில் நிரப்பும்போது அந்த வருடத்திற்கான காலி இடத்தோடு அதை சேர்த்து கணக்கிடகூடாது. இரண்டும் தனித்தனியாக நிரப்பப்பட வேண்டும். மொத்தமாக இரண்டையும் சேர்த்து கணக்கிட்டு இட ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத வரையறையை தீர்மானிக்கக் கூடாது.
84-வது சட்டத்திருத்தம் (2001):
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட அதிகரிக்கக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.
85-வது சட்டத்திருத்தம் (2001):
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பதவி உயர்வு தொடர்பான திருத்தங்கள் முன்வைத்தது.
86-வது சட்ட திருத்தம் (2002):
21ஆவது ஆர்டிகள் துணை பிரிவாக 21 அ என்ற ஒன்றை இணைத்தது. இதில் கல்வி உரிமை தொடர்பானது. 6 வயதிலிருந்து 14 வயது வரையிலான சிறார்களுக்கு கட்டாய இலவசக் கல்வி தரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
88 வது சட்ட திருத்தம் (2003):
268 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. மத்திய அரசால் சேவை வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. அதன்பிறகு மத்திய அரசும் மாநில அரசும் அதை ஈடு செய்து கொள்கின்றன. மேலும் ஆர்டிகள் 270 மற்றும் ஏழாவது அட்டவணை ஆகியவை திருத்தப்பட்டன.
89 ஆவது சட்ட திருத்தம் (2003):
ஆர்டிகள் 338 திருத்தப்பட்டது.பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒரு தேசிய கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
91 ஆவது சட்டத் திருத்தம் (2003):
கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆர்டிகல் 75 மாற்றி அமைக்கப்பட்டது. பிரதமர் உட்பட அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதம் அதிகரிக்கக் கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது.
92 வது சட்ட திருத்தம் (2003):
போடோ, மைதலி, சந்தாலி மற்றும் டோக்ரி என்ற நான்கு பிராந்திய மொழிகள் சேர்க்கப்பட்டு, எட்டாவது அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது. இதன் மூலம் அதிகாரப்பூர்வ மொழிகளின் எண்ணிக்கை 22 ஆக மாறியது.
93-வது சட்ட திருத்தம் (2005):
இந்த சட்டத்திருத்தம் ஜனவரி 20 2006 இல் அமலுக்கு வந்தது. சமூக அளவில் மாற்றம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு வழி செய்யும் வகையில் அரசு கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவது உள்பட பல சலுகைகளை சட்ட பூர்வமாக அறிவித்தது.
94-வது சட்டத்திருத்தம் (2006):
ஆர்டிகல் 164 (1) லிருந்து பீகாரை விலகியது. பழங்குடியினரின் நலனுக்காக அமைச்சர் அந்த பொறுப்போடு பிஹார்,மத்திய பிரதேசம் மற்றும் ஒரிசாவில் இருந்து பட்டியல் சாதியினர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரின் நலனையும் கவனித்துக்கொள்வார். ஆர்டிகல் 164 (1) பலன்கள் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களுக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டது.
95-வது சட்ட திருத்தம் (2009):
விதி 334 பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் SC-ST ஆங்கிலோ இந்தியன் இட ஒதுக்கீடு மேலும் பத்து வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டது
96, 97-வது சட்ட திருத்தம் (2011):
எட்டாவது அட்டவணை ஒரிசா என்பது ஒடிசா பதினைந்தாவது வரிசை என மாற்றப்பட்டது. விதி 19(1) C, 43(b) கூட்டுறவு சங்கங்கள் கொண்டுவருதல்,சுதந்திரமான ஜனநாயக அடிப்படையில் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படுதல் தொடர்பான சட்டங்கள் வரையறுக்கப்பட்டன.
243 (2)H பகுதி IX B உருவாக்கப்பட்டது.
98 வது சட்ட திருத்தம் (2012):
விதி 371 J ஹைதராபாத்,கர்நாடகா பகுதி முன்னேற்றத்திற்காக கர்நாடக மாநிலத்தில் சிறப்பு அதிகாரம் தரப்பட்டது.
99-வது சட்ட திருத்தம் (2014):
உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் கடந்த 1993 முதல் பின்பற்றப்பட்டு வந்த கொலிஜியம் முறைக்கு பதிலாக நீதிபதிகளின் நியமன ஆணையத்தை அமைத்தது.
108-வது சட்ட திருத்த மசோதா:
இது மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
110-வது சட்டத் திருத்தம்:
பஞ்சாயத்தில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது.
112-வது சட்ட திருத்தம்:
நகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
114 வது சட்டத்திருத்தம்:
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 இருந்து 65 ஆக உயர்த்தியது.
116-வது சட்டத்திருத்தம்:
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
121-வது சட்ட திருத்தம்:
தேசிய நீதித்துறை நியமன ஆணையம் அமைப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டது.
122-வது சட்ட திருத்தம்:
ஜிஎஸ்டி - சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது.
Do you Like to Download PDF Format:
0 Comments