இந்திய அரசியலமைப்பின் வரலாறு
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்தது. தற்போது நடைமுறையில் உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் நவம்பர் 26 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது. ஆங்கிலேயர் இயற்றிய பல்வேறு சட்டங்களின் வெளிப்பாடே இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆகும்.
கிழக்கிந்திய வணிகக் குழுவின் நிர்வாகம் அச்சட்டங்களின் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டது அதன்பின்னர் இங்கிலாந்து அரசு நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் 1858 முதல் 1947 வரை பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தியஅரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை 1927இல் M.N. ராய் அவர்கள் முதன்முதலாக பேட்ரியாட் என்ற நூலில் வெளியிட்டார்.
ஒழுங்குமுறை சட்டம் 1773:
- இச்சட்டம் முதன்முறையாக கம்பெனி ஆட்சிக்காக எழுதப்பட்ட அரசியலமைப்பு ஒன்றை வழங்கி கம்பெனியின் அரசியல் மற்றும் நிர்வாக பொருப்புகளை அங்கீகரித்தது.
- வங்காள ஆளுநரை வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மூன்று மாகாணங்களையும் தலைமை ஆளுநராக நியமித்தது. அத்தகைய முதல் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங் பிரபு ஆவார்.
- கல்கத்தாவில் 1774 ஆம் ஆண்டுஒரு தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
பிட் இந்திய சட்டம் 1784:
- 1773 ஆம் ஆண்டு சட்டத்தின் நடைமுறை சிக்கல்களக் களைய இச்சட்டம் உருவாக்கப்பட்டது.
- இச்சட்டம்ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மற்றும் அரசியல் நடவடிக்கைகளை பிரித்தது.
இயக்குனர் குழு - வர்த்தக நடவடிக்கை
கட்டுப்பாட்டு குழு - அரசியல் நடவடிக்கை
- இச்சட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய சரத்துக்கள் கீழ்கண்டவாறு
- முதன்முறையாக கம்பெனியின் நிலப் பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவின் நிலப் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டது.
- பிரிட்டிஷ் அரசுக்கு கம்பெனியின் இந்திய நிர்வாகத்தை மேற்பார்வையிடும் தகுதி அறிவிக்கப்பட்டது.
சாசன சட்டங்கள்:
ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாசன சட்டங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் சாசனத்தை நீட்டிக்க வகை செய்தது. இச்சட்டம் முதன்முதலாக 1793 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
சாசனச் சட்டம் 1813:
இந்தியாவில் கம்பெனிக்கு இருந்த ஏகபோக வணிக உரிமை தடை செய்யப்பட்டது.
இந்தியரின் கல்விக்கென ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிட ஒப்புதல் வழங்கியது.
சாசனச் சட்டம் 1833:
- இச்சட்டம் நிர்வாகத்தை மையப்படுத்தி அதன் கடைசி முயற்சியாகும்.
- சீனாவில் கம்பெனிக்கு இருந்த ஏகபோக வாணிக உரிமை தடை செய்யப்பட்டது.
- வங்காளத்தின்தலைமை ஆளுநர் பதவி இந்தியாவின் தலைமை ஆளுநர் என மாற்றப்பட்டது. (இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு).
- மேலும்இச்சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக அதிகாரங்களை பறித்து அதனை வெறும் நிர்வகிக்கும் அமைப்பாக மாற்றியது.
சாசனச் சட்டம் 1853:
- முதன்முறையாக கவர்னர் ஜெனரலின் நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை தனியாக பிரிக்கப்பட்டது.
- அரசு பணிக்கு போட்டித் தேர்வை அறிமுகம் செய்தது.
- மெக்காலே குழு 1854 இல் அமைக்கப்பட்டது. இது போட்டித் தேர்வுகளுக்காக அமைக்கப்பட்ட ஒரு குழு ஆகும்.
இந்திய அரசாங்கச் சட்டம் 1858:
- கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இந்திய ஆட்சிப் பகுதிகள் அனைத்தும் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தன.
- இந்தியாவின் தலைமை ஆளுநர் அரச பிரதிநிதி என அழைக்கப்பட்டார். அதன்படி முதல் அரச பிரதிநிதி கானிங் பிரபு.
0 Comments