Sindhu Samaveli Nagarigam Short Notes in Tamil

Sindhu Samaveli Nagarigam Short Notes in Tamil 

அறிமுகம்:

  • உலகின் மிகவும் பழமையான நாகரீகங்கள் மெசபடோமியா, சிந்து சமவெளி, எகிப்து நாகரிகம், சீன நாகரிகம் என்று நான்கு நாகரீகங்கள் உள்ளன இதில் மிகவும் முக்கியமானது சிந்து சமவெளி நாகரிகம் ஆகும்.
  • சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் கிமு 3300 முதல் 1900 வரை உள்ள காலங்கள் ஆகும்.
  • இந்த நாகரிகமானது மெலுக்கா என்றும் குறிப்பிடப்படுகிறது
  • இது இந்தியா, பாகிஸ்தான் முத்தும் ஆப்கானிஸ்தான் நாடுகளை உள்ளடக்கிய நாகரீகம் ஆகும்.
  • சிந்து சமவெளி நாகரிகம் வெண்கல காலத்தைச் சேர்ந்தது.
  • சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பா நகரை தான் முதன்முதலில் அகழ்வாய்வின் மூலம் கண்டறிந்தனர். அதன் காரணமாக இது ஹரப்பா நாகரீகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • சிந்து சமவெளி நாகரிகம் காலத்தின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
  • சிந்து சமவெளி நாகரீகத்தில் கண்டறியப்பட்ட நகரங்களில் மிகவும் பழமையானது மெகர்கர் ஆகும். இது தற்போது உள்ள பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் நகரில் போலன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.
  • சுமேரியா விட இவர்கள் அதிக அளவில் வாணிகத் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. நாரம்சின் என்பவர் தனது குறிப்பில் அதிக அளவில் அணிகலன்கள் வாங்கியதாக கூறியுள்ளார். இவர் சுமேரிய நாகரிகத்தின் அக்காடிய பேரரசின் அரசர் ஆவார்.

சிந்து சமவெளி காலம்:

  • சிந்து சமவெளி நாகரிகம் ஆனது அதன் காலத்தின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • ஆரம்ப நிலையாக கூறப்படும் கிமு 3000 முதல் 2600 வரை உள்ள காலத்தில் ஆம்ரி, கோட்டிஜி போன்ற இடங்களில் மக்கள் கிராம வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
  • முதிர்வு நிலையாகக் கூறப்படும் கிமு 2600 முதல் 1900 வரை உள்ள காலகட்டத்தில் ஹரப்பா, முகஞ்சதாரோ போன்ற 8 நகரங்களில் மக்கள் நகர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். (ஹரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், காலிபங்கன், சான்சதாரோ, லுப்பால், பனவாலி, ராக்கிஹர்க்கி)
  • இறுதி நிலை என்று கூறப்படும் பிந்தைய நிலை கிமு 1900 லிருந்து 1700 வரை உள்ள காலகட்டத்தில் மக்கள் லோத்தல் மற்றும் காளிபங்கன் என்னும் நகரத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

நில அமைப்பு:

சிந்து சமவெளி நாகரீகத்தின் மேற்கு எல்லை பாகிஸ்தான் நாட்டில் உள்ள சட்காஜென்டோர். வடக்கு எல்லை ஷார்ட்டுகை ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது. கிழக்கு எல்லை ஆலம்கிர்பூர் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. தெற்கு எல்லையான டைமபூர் இந்தியாவிலுள்ள மகாராஷ்டிராவில் உள்ளது.

கண்டுபிடிப்பு:

  • ஆங்கிலேயர் காலத்தில் 1826 இல்சார்லஸ் மேசன் என்பவர் ஹராப்பா நகரத்தை பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாபில் கண்டறிந்தார்.
  • 1831 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் பர்னஸ் என்பவர் ஆம்ரி என்ற நகரத்தை கண்டறிந்தார்.
  • அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்பவர் தான் சிந்து சமவெளி நாகரிகத்தை பெரிதும் அவர் வாய்வு செய்து கண்டுபிடித்தார். இவர் 1853, 1856, 1875 போன்ற காலங்களில் ஆய்வு செய்தார். இவர் 1867ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராகவும் இருந்தவர் ஆவார்.
  • 1920ஆம் ஆண்டில் சர் ஜான் மார்ஷல் என்பவர் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி ஆராய்ச்சி செய்தார். இவர் தான் பெரும்பாலான தகவல்களை வெளிக் கொணர்ந்தவர் ஆவார்.
  • 1940ஆம் ஆண்டு R.E மார்ட்டிமர் வீலர் என்பவர் அகழ்வாய்வு செய்தார்.
  • அவழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய நகரங்கள்:
  • ஹரப்பா (புதையுண்ட நகரம்) - 1920ஆம் ஆண்டு தயாராம் சஹானி என்பவர் பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப் நகரிலுள்ள ராவி நதிக்கரையில் கண்டறிந்தார்.
  • மொகஞ்சதாரோ (பெரிய நகரம், இடுகாட்டு மேடு) - R.D பானர்ஜி என்பவரால் 1922ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கரையில் கண்டறியப்பட்டது.
  • லோத்தல் (துறைமுக நகரம்) - R.S ராவ் என்பவரால் 1957ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டது. இது சிந்து சமவெளி நாகரீகத்தின் மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
  • காளிபங்கன் – B.B லால் என்பவரால் 1959ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தக்கார் நதிக்கரையில் கண்டறியப்பட்டது. இங்கு வேளாண்மை முக்கியத் தொழிலாக இருந்துள்ளது.
  • பனவாலி  - R.S பிஸ்த் என்பவரால் 1974-ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் கண்டறியப்பட்டது.
  • டோலவீரா – J.P ஜோஷி, பிஸ்த் என்பவரால் 1967ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டது.
  • சர்கோட்டா - இது இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் கண்டறியப்பட்டது.
  • ராக்கிஹர்கி - இந்த நகரமானது இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கண்டறியப்பட்டது.
  • சான்குதாரோ - இந்த நகரம் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் கண்டறியப்பட்டது.
  • ரோபாட் - இந்த நகரம் இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் சட்லஜ் நதிக்கரையில் கண்டறியப்பட்டது.

நகரமைப்பு:

  • சிந்து சமவெளி நாகரீகத்தில் இருவகையான நகர அமைப்புகள் உள்ளன. அதில் மேல் பகுதி சிட்டாடல் என்றும் கீழ்ப்பகுதி(lower town) தாழ் பகுதி என்றும் அழைக்கப்படுகிறது. மேல் பகுதியில் களிமன் குன்றுகளில் வீடுகள் அமைத்து வாழ்ந்துள்ளனர்.
  • சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து நகரங்களும் திட்டமிட்டு செங்குத்தாக சட்டக அமைப்பில் அமைந்துள்ளது.
  • இங்கு அமைந்துள்ள வீடுகள் அனைத்தும் சுட்ட செங்கற்கள் கொண்டு சுண்ணாம்பினால் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலான வீடுகள் கழிவறைகள், குளியல் அறைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் உடன் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இங்கு பெரும் குளியல் குளங்களும் அமைந்துள்ளது. இதில் நான்கு பக்கங்களிலும் பாதையும், சுற்றிலும் நடைபாதை அறைகளும் அமைந்து இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • ஹரப்பா, ராக்கிஹர்கி, மொகஞ்சதாரோ நாகரீகத்தில் தானியக் கிடங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • மேலவீராவில் மிகப்பெரிய நீர்த்தேக்க அமைப்பு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
  • லோத்தல் நகரத்தில் கப்பல் கட்டும் தளம் கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதாரம்:

  • சிந்து சமவெளி மக்கள் பொருளாதாரத்தில் பண்டமாற்று முறையை பின்பற்றியுள்ளனர்.
  • எடைகளை அளவிட அவர்கள் கனசதுர படிகக் கற்களை பயன்படுத்தியுள்ளனர்.
  • நீளத்தை அளக்க தந்தத்தால் ஆன நீள அளவை கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.
  • வணிகம் இவர்களது முக்கிய தொழிலாக உள்ளது. ஓமன், கத்தார், சிரியா போன்ற பகுதிகளுக்கு வணிகத் தொடர்பு வைத்துள்ளனர்.
  • செம்பு, தங்கம், அணிகலன்கள், கார்னீலியன் மணிகள் மற்றும் எடை கற்களை ஏற்றுமதி செய்துள்ளனர்.
  • நிக்கல் இறக்குமதி செய்து அதற்கான ஆதாரங்களும் உள்ளன.
  • சுமேரிய உடன் இவர்கள் அதிக அளவில் வணிக தொடர்பு கொண்டுள்ளனர். நாரம்சின் என்பவர் தனது குறிப்பில் அதிக அளவில் அணிகலன்கள் வாங்கியதாக கூறியுள்ளார். இவர் சுமேரிய நாகரிகத்தின் அக்காடிய பேரரசின் அரசர் ஆவார்.
  • சுமேரிய கல்வெட்டு ஆன கியூனிபார்ம் கல்வெட்டு இவர்களது வணிகத் தொடர்பை பற்றி கூறுகிறது.

வேளாண்மை:

  • சிந்து சமவெளி நாகரிக மக்கள் மேலாண்மை செய்து வாழ்ந்துள்ளனர். அவர்கள் கோதுமை, பார்லி, திணை, அவரை மற்றும் பருத்தி சாகுபடி செய்து அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
  • பருத்தியை கிரேக்க மொழியில் சிந்தன் என குறிப்பிட்டுள்ளனர்.
  • இவர்கள் இரு பயிரிடல் முறையை பின்பற்றியுள்ளனர். மேலும் இவர்கள் கால்வாய் மற்றும் கிணறுகள் அமைத்து வேளாண்மை செய்துள்ளனர்.
  • பெரும்பாலான வேளாண்மை செய்ததற்கான ஆதாரங்கள் காலிபங்கன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கால்நடை:

  • சிந்து சமவெளி மக்கள் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்த்து வந்துள்ளனர். இதில் மாடுகள் செபு என்று அழைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இவர்கள் பன்றி, யானை, எருமை மற்றும் ஒட்டகம் போன்றவற்றின் பயன்களையும் அறிந்து வைத்துள்ளனர்.
  • இவர்களுக்கு குதிரையின் பயன்பாட்டை பற்றி தெரிந்து அதற்கான சான்றுகள் ஏதும் இல்லை.

கலை மற்றும் பொழுதுபோக்கு:

  • ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ பகுதிகளில் பெரும்பாலான கல் சிற்பங்கள் கிடைத்துள்ளது. ஸ்டியடைட் என்ற மதகுரு சிலையும் கிடைத்துள்ளது.
  • சுடுமண் பொம்மைகள், வண்டிகள், சக்கரம் மற்றும் பம்பரம் போன்றவை கிடைத்துள்ளன.

சிறப்புகள்:

  • மகாயோகி சிலை ஹரப்பாவில் கிடைத்துள்ளது,அது பசுமதி என்ற சிவனின் திருமுக முத்திரை என்றும் கூறப்படுகிறது. இவரின் வலப்புறம் யானையும் புலியும் அமைந்துள்ளது. இடதுபுறம் காண்டாமிருகம் எருமையும், முன்பக்கமாக இரு மான்கள் அமர்ந்திருக்கும் நிலையில் உள்ளது.
  • நடன மங்கை சிலை ஒன்று செம்பினால் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்தவர் ஜான் பார்சல் ஆவார். இது மொகஞ்சதரோ பகுதியில் கிடைத்தது. அந்த நடன மங்கை கை முழுவதும் வளையல் அணிந்து இருந்தது.
  • ஸ்டியடைட் சிலையானது முகஞ்சதாரோ பகுதியில் கிடைத்துள்ளது.
  • பிற முத்திரைகள் காளை, எருமை, புலி, ஆடு, யானை மற்றும் காண்டாமிருகங்கள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன.
  • தாய் கடவுள் சிலையும் மொஹஞ்சதாரோவில் கிடைத்துள்ளது.
  • பானை ஓடுகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் செய்யப்பட்டுள்ளது.
  • டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பங்களும் கிடைத்துள்ளன. குரங்கு, நாய், ஆடு, எருது, அணில், மாட்டு வண்டி, பறவைகள், ஆண், பெண், மீன், மயில் உருவங்களும் சுடுமண்ணால் செய்யப்பட்டுள்ளது.

எழுத்துமுறை:

இவர்கள் சித்திர எழுத்து முறையை பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் களிமண் பலகை மீது எழுத்துகளை எழுதி வந்துள்ளனர். பௌஸ்ரோ பேட்டன் முறை என்னும் வலம் இருந்து இடமாக எழுதும் முறையை பயன்படுத்தியுள்ளனர். இவர்களது எழுத்துமுறையில் மீன் குறியீடுகள் அதிகமாக பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download PDF Format - Click Here

Post a Comment

1 Comments

  1. If you win the bet, your payout would be the $100 win plus your unique $120 bet for a complete of $22O. You can even place your bets at the Turf Club kiosk inside EPIC, and seize a seat for a selection of draft beer and upscale recreation day grub in entrance of a 30’ HDTV. You most likely remember the Montreal Expos, the beleaguered 코인카지노 franchise once as} owned by MLB before ultimately transferring to Washington in 2005 to turn into the Nationals. What you could not remember is that the Expos started enjoying in} in Montreal in 1969 as a National League team, 8 years before the Blue Jays joined the American League in 1977.

    ReplyDelete