About Me

Economics One Liner Part 1 Question and Answer in Tamil

Economics One Liner Part 1 Question and Answer in Tamil
  1.  இந்திய நாட்டு வருமாநத்தில் அதிக பங்களிப்பு எந்த துறையில் வருகிறது - சேவை துறை (58.4%)
  2. தலையிடாக் கொள்கை என்றால் என்ன - அரசு பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பது
  3. பணம் என்பது எதையெல்லாம் செய்ய வல்லதோ அதுவே பணம் என கூறியவர் யார் - பேராசிரியர் வாக்கர்
  4. பணத்தின் முக்கிய பணிகள் நான்கு அவை - பரிமாற்றக் கருவி, மதிப்பின் அளவுகோல், மதிப்பின் நிலைகலன், எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு
  5. நமது நாட்டின் மைய வங்கி எது - ரிசர்வ் வங்கி
  6. நமது நாட்டின் பண மதிப்பை கட்டுப்படுத்தும் வங்கி எது - ரிசர்வ் வங்கி
  7. குறுகிய பணம் (M1)என்றால் என்ன - பொது மக்களிடம் உள்ள செலவாணி 
  8. M2 என்பது என்ன - அஞ்சலக சேமிப்பு வைப்புகள்
  9. விரிவான பணம் (M3) என்றால் என்ன - வங்கியிலுள்ள பொதுமக்களின் கால வைப்புகள்
  10. M4 என்பது என்ன - M3அஞ்சலக மொத்த வைப்பு + பல்வேறு நிதி அமைப்புகளின் சேமிப்பு வைப்புகள்
  11. கட்டளை பணம் என்றால் எது - புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்கள்
  12. வங்கி வட்டிவீதம் என்றால் என்ன - வணிக வங்கிகளுக்கு மைய வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம்
  13. பண வீக்கத்தை குறைக்க மைய வங்கி வட்டி வீதத்தை என்ன செய்யும் - உயர்த்தும்
  14. மைய மாநில அரசுகளின் கடன் பத்திரங்கள் வாங்கி விற்பதை ரிசர்வ் வங்கி எவ்வாறு மேற்கொள்ளும் - வெளிசந்தை நடவடிக்கை
  15. தேக்க நிலை பண வீக்கம் எந்தாண்டு காணப்பட்டது - 1970
  16. நீர்மைத் தடை என்பது பண அளிப்பு அதிகரித்தாலும் வட்டிவீதத்தில் எந்த வித மாற்றமும் இருக்க க்கூடாது என்பது யாருடைய கூற்று - கீன்ஸ்
  17. அருமைப் பணம் என்றால் என்ன - வட்டிவீதம் அதிகமாக இருப்பதையும் பண அளிப்பு குறைந்து போவதையும் குறிக்கும்
  18. மலிவுப் பணம் என்றால் என்ன - குறைந்த வட்டியில் கடன் கிடைப்பது
  19. எம்மொழியில் பணத்திற்கு "மானட்டா" எனப்படுகிறது - லத்தீன்
  20. மானட்டா என்பது எந்த நாட்டு கடவுளின் பெயர் - உரோமானியப் பெண் கடவுள் ஜினடோ
  21. பண அளவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் - இர்விங் பிஷர்
  22. பண அளவுக் கேட்பாட்டின் மையக் கருத்து என்ன - பண அளப்பின் அளவு மாற்றமடையும் போது விலையும் மாற்றமடையும்
  23. பணத்தின் மதிப்பு குறைவதும் விலைகள் உயர்ந்து செல்வதும் பணவீக்கம் என யார் கூறியவர் - கிரௌத்தர்
  24. கட்டுப்படுத்தப்பட்ட பண வீக்கம் என்றால் என்ன - விலை மட்டம் உயராமலேயே பணவீக்கம் தோன்றும்
  25. கட்டுப்படுத்தப்பட்ட பண வீக்கம் காலத்தில் தோன்றும் - போர்க்காலங்கள்
  26. தேவை இழுப்பு பணவீக்கம் என்றால் என்ன - அதிகப்படியான பணம் மிக க்குறைந்த பண்டங்களை துரத்துவது
  27. மிகைவேகப் பணவீக்கம் என்பது - ஒவ்வொரு நாளும் விலைமட்டம் வரம்பின்றி உயர்ந்து கொண்டே செல்வது
  28. செலவு உந்து பண வீக்கம் என்பது - உற்பத்தி செலவு அதிகரிப்பு
  29. உற்பத்தி வளர்ச்சித் தடை பண வீக்கம் என்பது - முழுவேலைவாய்ப்பு உற்பத்தி நிலை அடையும் போது சில பற்றாக்குறை நிலையும் சம மற்ற நிலையும் மற்றும் இறுதிநிலைச் செலவில் உயர்வும் ஏற்பட்டு அதன் விளைவாகப் பணவீக்கம் ஏற்படுவது
  30. இலாப உந்து பண வீக்கம் என்றால் என்ன - முதலாளிகள் லாபத்தை ஊட்ட விலையை உயர்த்துவதால் ஏற்படுவது
  31. பணவீக்கத்தை கட்டுபடுத்தும் முறைகள் - வரி விதிப்பு அதிகரித்தல், மூலதன திட்டங்களின் மீதான அரசு செலவை குறைத்தல், இறக்குமதியில் கட்டுப்பாடுகளி விதித்தல், பங்கீடு விலைக்கட்டுபாடு
  32. பண மதிப்பு உயர்ந்து கொண்டு பண்டங்கள் மதிப்பு குறைவது பண வாட்டம் என்றவர் - கிரௌத்தர்
  33. பொருளாதார உயர்வு எப்போது காணப்படும் - பணவீக்கம்
  34. மந்தமான பொருளாதாரம் எப்போது காணப்படும் - பண வாட்டம்
  35. பணவீக்க காலத்தில் யார் அதிக லாபம் பெறுபவர் - வணிகர்கள்
  36. பணவீக்க காலத்தில் யார் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் - ஓய்வூதியம் பெறுபவர்கள்
  37. முதலீட்டாளர்கள் எப்போது அதிக லாபத்தை பெறுவார்கள் - பண வாட்டம்
  38. வாடகை பெறுபவர் பணவீக்க காலத்தில் என்ன அடைவார்கள் - இழப்பு
  39. வேலையில்லா திண்டாடத்தை உருவாக்குவது எது - பண வாட்டம்
  40. பணத்தை கட்டுப்படுத்தாவிட்டால் அது மனித அழிவுக்கு வழிவகுக்கும் என்றவர் - இராபர்ட்சன்
  41. கட்டாயமாக செலுத்த வேண்டியதே வரி என யார் கூறினார் - பேராசிரியர் செலிக்மேன்
  42. நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப் பட்டதோ அவரே வரி செலுத்துவது என யார் கூறினார் - பேராசிரியர் டால்டன்
  43. விளிம்பு நன்மை வரி என்றால் என்ன - ஊதிய மட்டுமல்லாது இதர சலுகைகளையும் தனது ஊழியர்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் செலவினங்கள் மீது விதிக்கும் வரி
  44. கலால் வரி என்றால் என்ன - இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கலின் மீது விதிக்கப்படும் வரி
  45. சுங்க வரி என்றால் என்ன - இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரி
  46. சேவை வரி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது - 1994
  47. செஸ் வரி என்பது - வரியின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி
  48. டோபின் வரி என்றால் என்ன - உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும் பணபரிவத்தனை மீது விதிக்கப்படும் வரி 
  49. வேளாண்மை மீது யார் வரி விதிக்கிறார் - மாநில அரசு
  50. செய்தித்தாள் மீது யார் விதி விதிப்பவர் - மத்திய அரசு
Download PDF Format

Countdown Timer For Download Files Automatically - HTML, CSS & Javascript
Download Files
Please wait..
If the download didn't start automatically, click here.

Post a Comment

0 Comments