About Me

MCA படிப்பு காலம் குறைப்பு ஏஐசிடிஇ(AICTE) அறிவிப்பு

MCA படிப்பு காலம் குறைப்பு ஏஐசிடிஇ அறிவிப்பு

மூன்று ஆண்டுகளாக இருந்த எம்.சி.ஏ படிப்புக்கான கால அளவை இரண்டு ஆண்டுகளாக குறைத்து ஏஐசிடிஇ(AICTE) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பல்கலை கழக அனுமதி குழுவின் 545வது கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஏஐசிடிஇ(AICTE) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது. ஏஐசிடிஇ(AICTE) விதிகளின் படி இதுவரை மூன்று ஆண்டுகள் என இருந்த எம்சிஏ படிப்புக்கான கால அளவு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது.

இதன் அடிப்படையில் 2020-2021ம் ஆண்டு முதல் எம்சிஏ படிப்பு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இனி இரண்டு ஆண்டுகளாக மாற்றப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் 2020-2021 ம் ஆண்டு எம்.சி.ஏ படிப்பில் சேர பிசிஏ அல்லது பிஎஸ்சி கம்ப்யுட்டர் சயின்ஸ் அல்லது அது தொடர்பான படிப்புகளை எடுத்து படித்திருக்க வேண்டும். +2 வகுப்பில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் இளங்கலை படிப்பில் 50 % மதிப்பெண்களை பெற்றிருக்கவேண்டும்.

Post a Comment

0 Comments