நீதிப் பேராணைகள் (Writ)

நீதிப் பேராணைகள் (Writ)

இந்திய அரசியல் அமைப்பு நீதி பேரணிகள் பற்றி கூறும் சரத்து 32 ஆகும். ஐந்து வகையான நீதிப்பேராணைகள் உள்ளன. அவற்றை கீழ்கண்டவாறு விளக்கலாம்,

ஆட்கொணர் நீதிப்பேராணை (Habeas Corpus):

அதாவது நீதிமன்றத்தின் முன் ஒருவரை ஆஜர்படுத்த வேண்டும் என்பதே இதன் கருத்தாகும். குடிமக்களை தகுந்த காரணத்திற்காக கைது செய்து காவலில் வைக்கும் அதிகாரத்தை அரசாங்கம் பெற்றுள்ளது. இந்த அதிகாரம் தவறாக பயன்படுத்தப் பட்டால் குடிமக்களின் சுதந்திர உரிமை பாதிக்கப்படும். எனவே எவரையும் சட்ட முறைப்படி இல்லாமல் சிறை படுத்துதல் கூடாது.அப்படி ஒருவர் சட்ட முறைக்கு மாறாக அரசினால் காவலில் வைக்கப்பட்டார் அவர் ஆணையைப் பிறப்பித்து தன்னை விடுவிக்குமாறு உயர் அல்லது உச்ச நீதிமன்றத்தை வேண்டிக்கொள்ளலாம்.

கட்டளை நீதிப் பேராணை (Mandamus):

மாண்டமஸ் என்பதற்கு நாம் கட்டளை இடுகிறோம் என்பது பொருளாகும். பொது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து ஓர் அதிகாரி, நிர்வாக அமைப்பு, தீர்ப்பாயம், கூட்டமைப்பு அல்லது கீழ் நீதிமன்றம் தவறும் போது அக்கடமையைச் செய்யுமாறு உயர் அல்லது உச்சநீதிமன்றத்தால் இடப்படும் ஆணை செயலுறுத்தும் நீதிப் பேராணை எனப்படும்.

தடையுறுத்தும் நீதிப் பேராணை (Prohibition):

இதனை வழக்கு விசாரணை தடை உத்தரவு என்றும் வழங்கலாம். ஒரு கீழ் நீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்பை மீறி செயல்படுவதையும், இயற்கை நீதிக்கு முரணான செயல்படுவதையும், தடை செய்யும் அதிகாரம் ஆனது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் எதிராக மட்டுமே வழங்கப்படும்.

ஆவண கேட்பு நீதிப் பேராணை (Ceritori):

கீழ் நிலை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் நீதி உதவிகள் அலுவல்களைச் செய்யும் அதிகாரிகள் மற்றும் அமைப்புகள் அதிகார வரம்பை மீறி செயல்பட்டால் இயற்கை நீதிக்கு முரணான நடவடிக்கை எடுத்தாலும் அவற்றை மறு ஆய்வு செய்து நீக்கம் செய்வதற்கான அவை சம்பந்தமான ஆவணங்களை பணத்தை அனுப்புமாறு மேல்நிலை நீதிமன்றம் ஆணையிடுவது தான் நெறிமுறை உணர்த்தும் நீதிப்பேராணை என்பதாகும்.

தகுதி வினவுதல் (Quo-Warrantyo):

பொது அதிகாரப் பதவியில் உள்ளவர் அதற்கான தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள தகுதிகள் உடையவரை பொது அதிகார பதவியில் இருக்க முடியும். அப்பதவியில் உள்ள ஒருவர் மீது பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி வேறு எவரேனும் முறையிட்டால் அவர் எந்த தகுதியில் அப்போது பதவியை வகிக்கிறார் என்று வினவி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments